×

காவிரிக்கு வேளாண் ஆலயம் எழுப்பி மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

தஞ்சாவூர், ஜன.3: காவிரிக்கு வேளாண் ஆலயம் எழுப்பி மக்கள் வழிபாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் சார்பில் இயற்கை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நிகழ்வு குறித்து நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் தஞ்சாவூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கால பைரவர் கோயில் முன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் அருசீர் தங்கராசு தலைமை வகித்தார்.

இதில் லத்தடி நீர் அதிவேகமாக கீழ் செல்வதால் நில சீர் தன்மை குறைந்து பூகம்பம் வருவதற்கும் வாய்புகள் உள்ளன. நிலத்தில் நீர் வளம் காக்க ஆறுகளில் அடித்தளம் போடுவதை அரசு நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பூப்பதும் காய்ப்பதும் பெரும் பங்கு வாய்ப்பது காவிரி நீர். மனிதர்கள் குடிப்பது, குளிப்பது, கழிப்பது அனைத்து உயிர்களுக்கும் உயிர் ஆதாரமாக இருக்கக்கூடிய இயற்கை பேரருள் கருணைத்தாய் காவிரிக்கு வேளாண் ஆலயம் எழுப்பி மக்கள் வழிபாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு சிறிது தூரம் மட்டுமே உள்ளது. ஆனால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக 9 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதால் நேரமும், பொருள் விரயமும் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மருத்துவக்கல்லூரி சுற்றுச்சுவரை உடைத்து சாலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சேவா தளம் திருஞானம், வழக்குரைஞர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் அருண் சுபாஷ், அய்யா சுரேன், ராஜேந்திரன், அருளி தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post காவிரிக்கு வேளாண் ஆலயம் எழுப்பி மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Thanjavur ,Kaveri Natural Way Agriculture Farmers Association ,Kaveri ,Dinakaran ,
× RELATED அரவக்குறிச்சியில் குழாய் உடைந்து 3 மாதமாக வீணாகும் குடிநீர்